[X] Close

ரஹ்மான் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘கோப்ரா’ படக்குழு

சினிமா

-Cobra--team-celebrates-AR-Rahman-s-birthday

 


Advertisement

‘கோப்ரா’ படக்குழுவுடன் கேக் வெட்டி ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஆஸ்கர் நாயன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 53வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சமூக வலைத்தளங்கள் முழுக்க அவருக்கு வாழ்த்துகள் நிரம்பி வழிந்தன. செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஹாலிவுட்டில் இருப்பவர்கள் எல்லாம் சென்னையில் உட்கார்ந்து என்ன பண்றே’ என்கிறார்கள். நான் இங்கு இருந்தது நல்லதுதான். இதுவரை வேலை பார்க்காத பலருடன் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது என கூறியிருந்தார்.


Advertisement

இதனிடையே, ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளை ‘கோப்ரா’ படக்குழு அவருக்கு கேக் ஊட்டி கொண்டாடி உள்ளது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. சீயான் விக்ரமை வைத்து இளம் இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் பணியாற்றியவர். இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பாதன் நடித்து வருகிறார். நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றார். இதனை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’, ‘வயாகாம்18 மோஷன் பிக்ச்சர்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.

View image on Twitter


Advertisement

ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’படத்தின் மூலம் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இதுவரை பஃபிடா அவார்ட் மற்றும் இரண்டு கிராமி அவார்ட், ஆறு தேசிய விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது, 15 ஃபிலிம்ஃபேர் அவார்ட், இரண்டு ஆஸ்கர் அவார் என பல விருதுகளை பெற்று இந்தியவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என மொழிவேற்றுமை இல்லாமல் திரை இசைத்துறையில் பயணித்து வருகிறார். 


Advertisement

Advertisement
[X] Close