[X] Close

சென்னைக்கு வருகிறது ‘லைட்’ ரயில் சேவை..! தாம்பரம்– வேளச்சேரி வழித்தடத்திற்கு திட்டம்..!

தமிழ்நாடு

Light-Train-coming-to-Chennai

(கோப்பு படம்)


Advertisement

தாம்பரம் - வேளச்சேரி இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது லைட் ரயில் அதாவது இலகு ரயில் போக்குவரத்து முறையாக திட்டமிடப்பட்டுள்ளது.

தாம்பரம் - வேளச்சேரி இடையிலான 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் போக்குவரத்து முறையை அமைக்க உள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ள நிலையில் மோனோ ரயில் என்பது எதிர்காலத் திட்டமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.


Advertisement

image

(கோப்பு படம்)

உலகம் முழுவதும் 7000 திரைகள்: முழு வீச்சில் களம் இறங்கியுள்ள தர்பார் குழு! 


Advertisement

இந்த நிலையில் புதிய ரயில் போக்குவரத்து முறையாக இலகு ரயில் போக்குவரத்தை கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி, ‌‌கனடா தலைநகர் ஒட்டாவா,‌ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து முறையாகும்.

Image result for இலகு ரயில்

(கோப்பு படம்)

“நேரம் வரும்போது சொல்கிறேன்”- லோகேஷ் கனகராஜ் குறித்து கமல் சொன்ன சூசகம் 

இந்த திட்டத்தை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் திட்டத்தைப்போல அதிக செலவு பிடிக்கக் கூடியது இல்லை. ஒரு கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க, 400 முதல் 500 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்றால், இலகு ரயில் திட்டத்திற்கு 80 முதல் 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். இதன் கட்டுமானப் பணிகளுக்கும் குறைந்த அளவே செலவு பிடிக்கும்.

அதேபோல, குறுகிய, நெரிசலான வளைந்து செல்லக்கூடிய பாதைகளில் எளிதாக செல்லக்கூடியது. இலகு ரயிலில் கூடுதல் பயணிகளையும் ஏற்றிச்செல்ல முடியும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கழகம் இதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறது


Advertisement

Advertisement
[X] Close