[X] Close

“நேரம் வரும்போது சொல்கிறேன்”- லோகேஷ் கனகராஜ் குறித்து கமல் சொன்ன சூசகம்

சினிமா

Actor-kamalhaasan-speaks-about-lokesh-kanagaraj

‘மாநகரம்’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படமான ‘கைதி’யையும் சிறப்பாக கொடுத்தார். இந்நிலையில் திரையுலகினர் கலந்துகொண்ட தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் மக்களுக்கு பிடித்த இயக்குநர் என்ற விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது.


Advertisement

இந்த விருதை நடிகர் கமல்ஹாசன் அவருக்கு வழங்கினார். அப்போது பேசிய லோகேஷ், தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை என்றும், கமலின் அனைத்து படங்களையும் பார்த்ததே தான் செய்த நல்ல காரியம் என்றும் தெரிவித்தார். மேலும் கமலின் படம் கொடுத்த உத்வேகத்தில்தான் ‘கைதி’ படத்தை இயக்கினேன் என்றும் தெரிவித்தார்.


Advertisement

அவரைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “ எனது படம் ஒருவருக்கு உத்வேகமாக இருந்தது மகிழ்ச்சி. ஆக ‘கைதி’ படத்திற்கு நானும் ஒரு இயக்குநர். இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. நேரம் வரும் போது சொல்கிறேன்” என தெரிவித்தார். விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் படம் இயக்க வாய்ப்பிருப்பதாகவும், அதனைத்தான் கமல் மறைமுகமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 


பொன்னியின் செல்வன் குழுவில் வைரமுத்து ஏன் இல்லை? - ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் 


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close