Published : 16,Jan 2017 04:00 AM

ரசிகரின் செல்ஃபோனை பறித்து வீசிய பவுலர் ஆர்.பி.சிங்..!

Cricketer-RP-Singh-throws-fan-s-cellphone

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது குஜராத் அணி வீரர் ஆர்.பி.சிங், ரசிகரின் செல்ஃபோனை பறித்து மைதானத்தில் வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்காக விளையாடிய பிரபல பந்து வீச்சாளர்களுள் ஒருவர் ஆர்.பி.சிங். தற்போது, இவர் குஜராத் அணிக்காக மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார்.

கடந்தவாரம், ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது குஜராத் அணி வீரர் ஆர்.பி.சிங், ரசிகரின் செல்ஃபோனை பறித்து மைதானத்தில் வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணியுடனான இறுதிப்போட்டியின் போது செல்ஃபி எடுத்துக்‌கொள்ள ரசிகர் ஒருவர் ஆர்.பி.சிங்கிடம் கேட்டுக்கொண்டார். இதனால் எரிச்சலடைந்த ஆர்.பி.சிங் ரசிகரிடமிருந்து செல்ஃபோனை வாங்கி அதனை மைதானத்தில் வீசியெறிந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்