[X] Close

யார் போறாங்களோ, அவங்களுக்கே விருது: அரவிந்த்சுவாமி கிண்டல்

arvindswamy-tweet

விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், வாக்குகளுக்காக எனது நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை என்று நடிகர் அரவிந்த்சுவாமி கூறியுள்ளார்.


Advertisement

முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்யும் நடிகர் அரவிந்த்சுவாமி, ''சில விருதுகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. யார் விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது. இதனால் விருதுக்கு என் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், நான் வாக்குகளுக்காக என் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

எந்த விருது வழங்கும் விழாவை விமர்சித்து அரவிந்த்சுவாமி இப்படி டிவீட் செய்துள்ளார் என்பது தெரியவில்லை. கடந்த வருடமும் ஒரு விருது விழா பற்றி இவர் இப்படிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Related Tags : avindswamytweet

Advertisement

Advertisement
[X] Close