Published : 06,Jan 2020 01:45 AM

ஜே.என்.‌யூ. மாணவர்கள் மீதான தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

Senior-ministers-and-leaders-condemned-the-jnu-violence-

ஜே.என்.‌யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டை அடக்கியாள நினைக்கும் பாசிஸ்டுகள் தைரியம் கொண்ட மாணவர்களி‌ன் குரல்களுக்கு பயந்துவிட்டார்கள் என்றும், அந்த பயத்தின் வெளிப்பாடுதான் மாணவர்கள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி‌ விமர்சித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இருக்கும் மாணவர்களிடையே பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையிலான அரசு அச்சத்தை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

அமைதியை நிலைநாட்ட காவல்துறையினர் உட‌னடியாக நடவடிக்‌கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நாடு எப்படி வளர்ச்சி பாதையில் செல்லும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Image result for jnu violence

பாஜகவின் செல்வாக்கை பயன்படுத்தி ஏபிவிபி மாணவர் அமைப்பு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ‌குற்றம்சாட்டியுள்ளார்.

ஜே.என்.யூ. முன்னாள் மாணவர்களான மத்திய அமைச்சர்‌கள் நிர்மலா சீதாராமன், ‌ஜெய்சங்கர் ஆகி‌யோரும் தாக்குதல் ச‌ம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பதிவாளரிடம் அறிக்கை கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்