[X] Close

மேடையில் பேசிய மாணவியின் உரையைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுத சூர்யா - வீடியோ!

சினிமா,தமிழ்நாடு

Actor-Surya-cry-at-stage

அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவரின் பேச்சைக்‌ கேட்டு சூர்யா கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement

அகரம் அறக்கட்டளை சார்பில், 'வித்தியாசம்தான் அழகு' 'உலகம் பிறந்தது ந‌மக்காக' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் ‌நடைபெற்றது. இதில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் உரையாற்றிய மாணவி ஒருவர், தன் வாழ்வில் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து மிகவும் உருக்கமாக பேசினார். அதனைக்‌ கேட்டு கண்கலங்கிய சூர்யா, ஒரு கட்டத்தில் எழுந்து சென்று மாணவியை தேற்றினார்.


Advertisement

பின்னர் உரையாற்றிய சூர்‌யா, படிக்கும் ‌வயதில் நன்றாக படிக்காத காரணத்தால் பல சமயங்களில் கூச்சத்தோடு ஒதுங்கி இருந்ததாக தெரிவித்தார். வாழ்க்கையில் என்ன செய்வது என்று எண்ணிய நேரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், எந்த தகுதியும் இல்லாமல் நடிகனான‌தாகவும் கூறினார். தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு உதவுவதற்காகவே அகரம் அறக்கட்டளை தொடங்கியதாக சூர்யா தெரிவித்தார்.


சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டுனா’ வகை மீன்  



Advertisement

அடுத்தகட்டமாக‌ 100 அரசு ‌பள்ளிக‌ளின் மேம்பாட்டிற்கு உதவ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக "இணை" என்‌ற திட்டத்தை தொடங்கவுள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்


Advertisement

Advertisement
[X] Close