[X] Close

சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டுனா’ வகை மீன்

உலகம்

Owner-Of-A-Japanese-Restaurant-Buys-A-Tuna-Fish-For-Almost-Rs-13-Crore-At-An-Auction-

டோக்கியோ மீன் சந்தையில் ஏலம் விடப்பட்ட மீன் ஒன்று இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய்க்கு விலைபோய் உள்ளது.


Advertisement

பல அதிரடியான செய்திகள் இடையே சில ஆச்சரியமான செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு ஆச்சரியம் செய்தி டோக்கியோ நகரத்தில் நடந்தேறியுள்ளது. டோக்கியோ நகரத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப் பெரிய விற்பனையாக மீன் ஒன்று 1.8 மில்லியன் டாலருக்கு விலைபோய் உள்ளது. இது இதுவரை அதிக விலைக்கு விற்பனை ஆன இரண்டாவது மீன் ஆகும். இது குறித்த செய்தியை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Advertisement

டோக்கியோவில் டொயோசு மீன் சந்தை ஒன்று இயக்கி வருகிறது. அங்குதான் கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. அவ்வாறு வந்த 276 கிலோ கிராம் எடை கொண்ட மெகா சைஸ் மீன் ஒன்று 193.2 மில்லியன் யென் தொகைக்கு ஏலம் போய் உள்ளது. அதாவது அமெரிக்க டாலர் அளவில் இது 1.8 மில்லியன் ஆகும். இந்திய மதிப்புக்கு இந்த மீன் சுமார் 13 கோடி ரூபாய்க்கு நிகரானது. ஆகவே இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போய் உள்ள மீனை ஏலம் எடுத்தவர் புகைப்படம் இப்போது வைரலாக மாறியுள்ளது. இந்தத் தொக இந்த ஆண்டில் விடப்பட்ட இரண்டாவது பெரிய தொகையாகும். இந்த டுனா மீன் வடக்கு அமோரி பிரிஃபெக்ச்சர்-ல் இருந்து பிடிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் கலந்து கொண்ட கியோஷி கிமுரா, இதனை பலத்த போட்டிகள் மத்தியில் ஏலத்தில் எடுத்துள்ளார். இவர் சீனாவில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் எடுத்துள்ள தொகை கடந்த 2013 இல் எடுக்கப்பட்ட விலையை விட அதிகமாகும்.

 


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close