Published : 05,Jan 2020 12:26 PM

பாகிஸ்தானில் ‘சீக்கிய இளைஞர்’ கொலை - கண்டனம் தெரிவித்த இந்தியா..!

India-strongly-condemns-killing-of-minority-Sikh-youth-in-Pakistan

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவார் பகுதியில் சீக்கிய இளைஞர் ரவீந்திர சிங் ஷாப்பிங் செய்ய சென்றிருந்தார். இவர் சகோதரர் பத்திரிகையாளர் ஹர்மீத் சிங். மலேசியாவில் வசித்து வரும் ரவீந்திர சிங், தனது திருமணத்திற்காக பாகிஸ்தான் திரும்பியிருந்தார். இந்நிலையில் ஷாப்பிங் சென்ற இடத்தில், இஸ்லாமிய கும்பலைச் சேர்ந்தவர்கள், ரவீந்திர சிங் மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரவீந்திர சிங் பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் நன்கனா சாகிப் குருத்வாராவில் தாக்குதல் நடைபெற்று சில தினங்களில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image

இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறுவுத்துறை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரான சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தும் இழிவான காழ்ப்புணர்ச்சியை நிறுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தை செய்தவர்கள் மீது உடனே கைது நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஒரு உதாரணமாக இருக்கும் வகையில் வழி செய்ய வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

"டெல்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானிக்கு தொடர்பு" ட்ரம்ப்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்