Published : 04,Jan 2020 12:18 PM

தேவாலயத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை!

robbery-in-kerala-church

கேரளாவில் உள்ள அடிமாலி கிறிஸ்தவ தேவாலயத்தின் கதவை உடைத்து ஒரு லட்சத்திற்கு அதிகமான பணம் திருடப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியில் அமைந்துள்ளது புனித தாமஸ் தேவாலயம். நேற்று இரவு தேவாலயத்தை பூட்டிவிட்டு சென்ற ஆலய அதிகரிகள் இன்று காலை வழக்கம் போல் திறக்க வந்தனர்.

நோபல் பரிசு வென்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்கள்: குஜராத் சபாநாயகர்

அப்போது தேவாலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது தேவாலய அலுவலத்தில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

image

அதேபோல், தேவாலய உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தேவாயல நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், அடிமாலி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்