Published : 04,Jan 2020 10:09 AM
சிக்ஸர், பவுண்டரிகள் அடித்தால் பதாகைகளை காட்டக் கூடாது..! : ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

இந்தியா- இலங்கை இடையிலான கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலம் கவுகாத்தியில், இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சில கட்டுபாட்டுகளை அம்மாநில கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.
அதன்படி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசியவுடன் காட்டப்படும் போஸ்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனா போன்றவற்றை எடுத்துவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய திரளான காவலர்கள் குவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியனில் 'ஓம்' என்ற ஒலியா? - கிரண்பேடியை கேள்விகளால் துளைத்த நெட்டிசன்ஸ்!