Published : 03,Jun 2017 01:47 PM

ஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார்: டி.ராஜா

t-raja-says-dmk-and-communist-party-work-together

மதவெறி அரசியலில் இருந்து நாட்டை மீட்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் டி.ராஜா தெரிவித்தார். 

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பேசிய டி.ராஜா இவ்வாறு தெரிவித்தார். பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டிய டி. ராஜா, கூட்டாட்சித் தத்துவத்தை நசுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மெட்ராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றம் செய்ய விடா முயற்சி எடுத்தவர் கருணாநிதி என்று குறிப்பிட்ட அவர், கருணாநிதி அடிப்படையில் ஒரு சமூக புரட்சியாளர் என்று கூறினார். மதவெறி அரசியலில் இருந்து நாட்டை மீட்க எங்களுடன் ஸ்டாலின் கைகோர்ப்பார் என்றும் டி.ராஜா தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு தேசிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்