Published : 03,Jan 2020 01:16 PM
ஹர்திக் காதலை மறைமுகமாக கிண்டல் செய்த குர்ணல் பாண்ட்யா..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு அவரது சகோதரர் குர்ணல் பாண்ட்யா மனப்பூர்வமான வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆனால் அதில் அவர் மறைமுகமாக கிண்டல் செய்திருப்பது இப்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, நடிகை நடாசா ஸ்டான்கோவிக் உடனான தனது காதலை இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக புத்தாண்டு அன்று அறிவித்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது காதலியுடன் கைகோர்த்தபடி ஒரு படத்தை வெளியிட்டார். அதில், “எனது பட்டாசுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது பட்டாசு என்றால் காதலியைக் குறிக்கும் நோக்கில் இந்தச் சொல்லை பயன்படுத்தி இருந்தார்.