Published : 03,Jan 2020 11:40 AM

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறார் ராதிகா..?

Raadhika-plans-a-film-on-father-MR-Radha-s-life

நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ராதிகா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் யாருக்கும் எம்.ஆர்.ராதாவை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தனது குணச்சித்திர நடிப்பால் பலரையும் ஈர்த்தவர். ஒரே சமயத்தில் காமெடியாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ஆற்றலை வெளிப்படுத்தியவர். எம்.ஜி.ஆரை இவர் சுட்டப் பிறகு, இன்னும் அதிகம் அறியப்பட்ட நடிகராக மாறினார்.

இவரது நடிப்பில் வெளியான ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம் திரை உலகில் சாகாத வரம் பெற்ற படம் என திரை விமர்சகர்களால் புகழப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் இவரது நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்த பிறகு ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை வழங்கினார். ஆகவே இவர் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா என்றே அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் நடிகை ராதிகா, அவரது தந்தையும் வில்லன் நடிகருமான எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிலகால இடைவெளிக்குப் பிறகு தனது தொலைக்காட்சி நடிப்பை மீண்டும் தொடங்கி உள்ள ராதிகா, அவரது சொந்த கம்பெனியான ராடன் மீடியா ஒர்க்ஸ் மூலம் இதனை தயாரிக்க உள்ளதாக தெரிகிறது.

எம்.ஆர்.ராதா பேரன் ஐகே தனது தாத்தாவின் வாழ்கையை இயக்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். இவர் தனது தாத்தாவின் சொல்லப்படாத கதையை ஒரு பேரனாக மட்டுமல்ல, ரசிகராகவும் விவரிக்க விரும்புவதாக கூறியிருந்தார். ஐகே ஏற்கெனவே நடிகர் ஜீவாவை வைத்து ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்