Published : 02,Jan 2020 04:20 AM

ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கவில்லை - வாக்கு எண்ணும் பணி பல இடங்களில் தாமதம்!

Election-vote-counting-getting-late-due-to-some-issues

காலை உணவு வழங்கவில்லை எனக்கூறி வாக்கு எண்ணும் பணி பல இடங்களில் தாமதமாகியுள்ளது

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு ‌நடந்தது.

 

வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் பல இடங்களில் நடந்து வருகிறது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், வேதாரண்யம் ஒன்றியம் பகுதி, ஆரணி, மதுரை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சில பகுதிகள் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் காலை உணவு வழங்கவில்லை எனக்கூறி வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.

 

அதேபோல் விருதுநகர் அருப்புக்கோட்டையில் வாக்குபெட்டியின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. பின்னர் சுத்தியலால் தபால் ஓட்டுப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணும் பணி தாமதமானது.


புத்தாண்டு பரிசு கேட்ட ரசிகரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த பிரதமர் மோடி! 


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்