
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.