விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த திரைப்படத்தின் வேலைகள் தொடங்க தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ஹீரோ' வெளியான பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'டாக்டர்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாகவே இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படம் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் கால்ஷீட் ஒதுக்கியிருந்தார். இந்தப் படத்தை விக்னேஷ், ஆரம்பக்கால காதலை எப்படி 20 ஆண்டுகள் கழித்து உணர்கிறோம் என்பதை வைத்து காமெடியாக அதனை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படம் பெரிய பட்ஜெட் என்ற காரணத்தால் கொஞ்சம் அந்நிறுவனம் பின்வாங்கியதாக பேச்சு அடிப்பட்டது. ஆகவே, விக்னேஷ் சிவன் அவரது சொந்த நிறுவனமான 'ரவுடி பிக்சர்ஸ்' மூலம் படத்தினை தயாரிக்க முடிவு எடுத்திருந்தார். அந்தத் திட்டம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
இதனிடையே சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதற்காக விக்னேஷ் சிவன் வேறொரு புதிய கதையை எழுதி வருகிறார். அந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தெரிகிறது. அவர் கதையை முடிக்க சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இந்த இடைவெளியை ஈடுகட்டவே 'டாக்டர்' படத்திற்காக 'கோலமவு கோகிலா' இயக்குனர் நெல்சன் திலிப்குமருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ளார், மேலும் பி.எஸ் மித்ரானுடன் 'ஹீரோ 2' எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மிலிந்த் ராவ் இயத்தில் 'நெற்றிகண்' படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!