Published : 30,Dec 2019 11:09 AM

ஓடும் ரயிலில் சாகசம்.. உயிரிழந்த இளைஞர்.. - ரயில்வே கடும் எச்சரிக்கை

Indian-Railway-warning-to-passengers

ஓடும் ரயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்றும் அது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது எனவும் இந்திய ரயில்வே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 26-ஆம் தேதி மும்பையில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த தில்ஷன் என்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி சாகச முயற்சியில் ஈடுபட்டார். அதை அவருடைய நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

ஜனவரியில் ரூ.71; டிசம்பரில் ரூ.78 - பெட்ரோல் விலை கடந்து வந்த பாதை!

அப்போது தடுப்புக் கம்பியில் தில்ஷன் தலை இடித்த நிலையில், ரயில் பெட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், இதை ட்விட் செய்து இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. தங்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ரயிலில் இருந்து இறங்குவது, ஓடும் ரயிலில் ஏறுவது விபத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியன் ரயில்வே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்