Published : 30,Dec 2019 03:08 AM
அயர்லாந்து பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளி

இந்தியா வந்துள்ள அயர்லாந்து பிரதமர், மகாராஷ்டிராவில் உள்ள தனது தந்தையின் கிராமத்துக்குச் சென்றார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வாராட் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் வராட்கர்.
மருத்துவரான இவர் 1960 ஆம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார். அசோக்கின் மகனான லியோ வராட்கர் தற்போது அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்தியா வந்த அவர், குடும்பத்தினருடன் தனது தந்தை வசித்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள கோயிலில் வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 3 தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தந்தையின் சொந்த ஊருக்கு வந்துள்ளது சிறப்பான தருணம் என்றார்.