Published : 29,Dec 2019 02:28 PM

ஹெல்மெட் அணியாமல் பயணித்த பிரியங்கா காந்திக்கு அபராதம்

police-penalty-for-priyanka-gandhi

உத்திரப்பிரதேசம் லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்திக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.‌‌எஸ். அதிகாரியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்திக்கச் சென்றார். அவரை‌க் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிரியங்கா காந்தி, “உத்திரப் பிரதேச மாநில காவல் துறையினர் என்ன செய்கிறார்கள்? இப்போது நாங்கள் எங்கேயும் சென்று வருவதுகூட தடை செய்யப்படுகிறது. நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சமூக சேவகர் தாராபுரியின் வீட்டுக்குச் சென்றேன். உத்திரப் பிரதேச மாநில காவல்துறையினர் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியதற்காக அவரைக் கைது செய்தனர்.

Image result for பிரியங்கா காந்தி ஹெல்மெட்

இப்போது ஒரு பெண் காவல்துறை அதிகாரி என் கழுத்தைப் பிடிக்கிறார். ஆனால் என்னுடைய லட்சியம் திடமானது. காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான அனைத்து குடிமக்களுடனும் நான் நிற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். ஆனால் பிரியங்கா காந்தியும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரும் தலைக்கவசம் அணியவில்லை. ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது விவாதங்களுக்கு உள்ளானது. தற்போது பிரியங்கா காந்தி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியது.

Image result for பிரியங்கா காந்தி ஹெல்மெட்

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பயணித்த பிரியங்கா காந்திக்கு லக்னோ காவல்துறை ரூ.6,100 அபராதம் விதித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்