வாக்குப்பெட்டிகளுக்கு முறையான பாதுகாப்பு வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

வாக்குப்பெட்டிகளுக்கு முறையான பாதுகாப்பு வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
வாக்குப்பெட்டிகளுக்கு முறையான பாதுகாப்பு வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை முறையாக பாதுகாக்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் வாக்குப்பெட்டிகளுக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டுமெ‌ன கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்படுவதால், முறைகேடுகள் நிகழாத வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ‌வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் குறித்த நட‌வடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலமாக பதிவு செய்யப்பட வேண்டுமென உத்தரவிடும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com