Published : 03,Jun 2017 05:29 AM

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு

Indian-origin-Leo-Varadkar-to-be-next-Ireland-PM

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட லியோ வராத்கர் அயர்லாந்து நாட்டு பிரதமராக இம்மாத இறுதியில் பதவியேற்க உள்ளார்.

பிரதமர் பதவிக்கான தேர்தலில் லியோ வராத்கர் 60 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். 38 வயதான லியோ வராத்கரின் தந்தை மும்பையை சேர்ந்தவர்.

வராத்கர் அயர்லாந்து பிரதமராவது உறுதியாகியுள்ள நிலையில் மும்பையில் உள்ள அவரது உறவினர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 38 வயதான லியோ வராத்கர், அயர்லாந்தின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும் தன்னை ஆண் பாலின ஓரினச் சேர்க்கையாளர் என்றும் லியோ வராத்கர் அறிவித்துக் கொண்டுள்ளார்.