[X] Close

“எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” - ட்விட்டரில் வாக்கு சேகரித்த ப.சிதம்பரம்

தமிழ்நாடு

p-chithambaram-canvasing-in-twitter-about-local-election

ஊராட்சி தேர்தலில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் ஆளும் அரசு பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி நடத்தவிடாமல் செய்து விட்டது. மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தனி அதிகாரிகளை வைத்து ராஜ்ஜியம் செய்தார்கள்.

கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு 


Advertisement

இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டுமென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆகவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மத்திய மற்றும் மாநில அரசின் நிதிகளை செம்மையாக பயன்படுத்த வாய்ப்பு தாருங்கள்.

அதேபோல் ஊராட்சி மன்றங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close