Published : 26,Dec 2019 10:03 AM
“வன்முறையை நோக்கி வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல”- பிபின் ராவத்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மக்களை வன்முறைக்கு அழைத்து செல்வது தலைமைப் பண்பின் அடையாளம் அல்ல என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், தலைவர்கள் கூட்டத்திலிருந்துதான் உருவாகிறார்கள் என்றும், எனினும் மக்களை, பொருத்தமற்ற திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது எனக் கூறினார். நாட்டில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் கூட்டம் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுவதுவது நல்ல தலைமையாகாது என்றார்.
சூரிய கிரகணத்தின் போது கழுத்துவரை மண்ணில் புதைப்பு - கதறி அழுத சிறுவர்கள்!
நாட்டின் எல்லையில் உள்ள சியாச்சின், சால்டோரோ ரிட்ஜ் பகுதிகளில் மைனஸ் 10 முதல் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் பதிவாகும்போதும் அங்கு உறுதியுடன் நின்று நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த விரும்புவதாக ராவத் தெரிவித்தார்.