செக்ஸ் டேப் சர்ச்சையில் ஜெயசூர்யா: பறிபோகிறது பதவி!

செக்ஸ் டேப் சர்ச்சையில் ஜெயசூர்யா: பறிபோகிறது பதவி!
செக்ஸ் டேப் சர்ச்சையில் ஜெயசூர்யா: பறிபோகிறது பதவி!

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர்  சனத் ஜெயசூர்யா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீடியோவில் ஜெயசூர்யாவுடன் இருப்பவர், மலீகா சிரிசேனா. இவர் இலங்கை நடிகை.  ஜெயசூர்யாவின் முன்னாள் காதலி. ’இதைப் படம் எடுத்ததே ஜெயசூர்யாதான். அவர் திட்டமிட்டே இதை செய்திருக்கிறார்’ என்றும் இதை மலீகாதான் திட்டமிட்டு எடுத்துள்ளதாக ஜெயசூரியா தரப்பிலும் மாறி மாறிக் கூறுகின்றனர். 

இலங்கை கிரிக்கெட்டிலும் இந்த டேப் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ’இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஜெயசூர்யா உடனடியாகப் பதவி விலக வேண்டும். நம் நாட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் அவர் இழிவை ஏற்படுத்திவிட்டார்’ என்று சில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக, இலங்கை அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் ஜெயசூர்யா, இந்த வீடியோ சர்ச்சை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சர்ச்சை காரணமாக இலங்கை கிரிக்கெட் போர்டின் தலைமை தேர்வாளர் பதவியை அவர் இழக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com