Published : 26,Dec 2019 05:48 AM
வளைய சூரிய கிரகணத்தை என்னால் பார்க்க முடியவில்லை - பிரதமர் மோடி

டெல்லியில் மேகமூட்டம் இருந்ததால் சூரிய கிரகணத்தை தன்னால் பார்க்க முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று தெரிந்தது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் முழுமையாக தெரிந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பல இடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. தமிழகத்தில் கோவை, தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணம் தெரியவில்லை.
இந்நிலையில் சூரியகிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், ''நாட்டு மக்கள் எல்லோரையும் போல நானும் சூரியக் கிரகணத்தைக் காண ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் டெல்லியில் மேகமூட்டம் இருந்ததால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை.
ஆனால் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதியில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் உரையாடி சூரிய கிரகணம் குறித்து மேலும் தெரிந்துகொண்டேன்'' என குறிப்பிட்டுள்ளார்.