[X] Close

கொரியன் தொழில்நுட்பம்: ஊட்டியில் அமைக்கப்படும் சுழலும் ரப்பர் தடுப்புகள்!

தமிழ்நாடு

Korean-Rolling-Barrier-System-in-ooty

தமிழகத்தில் முதல்முறையாக மலைப்பாதைகளில் வாகனங்கள் பள்ளத்தில் விழுவதைத் தடுக்கும் கொரியன் தொழில்நுட்பமான சுழலும் ரப்பர் தடுப்புச் சுவர்கள் உதகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில், கொண்டை ஊசி வளைவுகளில் நிகழும் வாகன விபத்துகளில் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வாகனங்கள் தடுப்புச்சுவர்களில் மோதி சேதமடைவதைத் தவிர்க்கவும், பள்ளங்களில் விழுவதைத் தவிர்க்கவும் சுழலும் ரப்பர் தடுப்புகள் உதகை-மைசூர் மலைப்பாதையில் சோதனை முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.


Advertisement

வளைவுகளில் அமைக்கப்பட்ட இந்த தடுப்புகளில் உருளும் ரப்பர் உருளைகள் இருக்கும். கட்டுப்பாட்டை இழந்து ஏதேனும் வாகனம் மோதினால், உருளைகள் மேல் பட்டு மீண்டும் சாலை பக்கமே திரும்பிச் செல்லும். இதனால் பெரிய விபத்துகள் தடுக்கப்படும்.

இது வெற்றி அடையும் பட்சத்தில் அனைத்து மலைப்பாதைகளிலும் இந்த கொரியன் தொழில்நுட்ப தடுப்புச் சுவர்களை அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close