[X] Close

விதவிதமான அலங்காரங்களால் விழாக்கோலம் பூண்ட தேவாலயங்கள்

இந்தியா

Christmas-celebrations-Around-tamilnadu

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்றனர்.


Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் உள்ள தேவாலயங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. நள்ளிரவில் நடைபெற்ற திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏசு பிறப்பை சித்தரிக்கும் வண்ணமயமான குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.

மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பரங்கிமலையில் உள்ள பழமையான புனித தோமையர் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன. இரவு 12 மணி ஆனதும் ஏசு பிறப்பு அறிவிக்கப்பட்டு, குடிலில் குழந்தை ஏசு வைக்கப்படும் வைபவம் நடைபெற்றது.


Advertisement

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்புகழ் பெற்ற தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடத்தப்பட்டன. 80 அடி நீளத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற வழிபாடுகளில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. வண்ணமயமான அலங்கரிக்கப்பட்டிருந்த பேராலயத்தில் திரளானோர் பிரார்த்தனை நடத்தினர்.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவக் கிராமத்தில் உள்ள புனித ஜூட்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சேலத்தில் உள்ள குழந்தை ஏசு தேவாலயம், மதுரையில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம், தஞ்சாவூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கோவை டவுன்ஹாலில் உள்ள ஆதிதூதர் தேவாலயம், திருச்சியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான உலக மீட்பர் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றன.


“இந்தியாவை பார்த்தாவது கத்துக்கங்க..” - பாக். அணிக்கு அக்தர் அட்வைஸ்  


 


Advertisement

Advertisement
[X] Close