[X] Close

விழாக்கோலம் பூண்டது கோபாலபுரம்

Festival-mood-in-Karunanidhi-house

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை ஒட்டி அவரது இல்லம் அமைந்துள்ள சென்னை கோபாலபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவும் 94-வது பிறந்த நாள் விழாவும் திமுக சார்பில் இன்று பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, நிதிஷ்குமார் உள்பட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, கருணாநிதிக்கு வாழ்த்து கூற பல முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை வரும் தேசிய தலைவர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மதிய விருந்து அளிக்கிறார். தொண்டர்கள் நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டாலும் ஏராளமான தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close