Published : 24,Dec 2019 02:41 PM

‘மிரட்டல் பின்னணி இசைக்கு தயாராகுங்கள்’ - தர்பார் பிஜிஎம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்

A-glimpse-of-Anirudh-s-BGM-for-Rajinikanth-s--Darbar-

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கான பிஜிஎம் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தர்பார் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தனது பழைய வாழ்க்கை குறித்து பலரும் அறியாத பல தகவல்களை முதன்முறையாக பகிர்ந்து கொண்டார். தான் தமிழ் மண்ணில் கால் வைத்தது எப்படி என்ற கதையை உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார். மேலும் இசையமைப்பாளர் அனிருத்தை இளையராஜாவுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.

Image result for anirudh with a r murugadoss


அவரது பாடல்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ரஜினிக்கு முன் பேசிய இயக்குநர் ஷங்கர், ‘இப்போது ‘இந்தியன்2’ படத்திற்காக இவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். கதையில் வரும் ஒரு பின்னணியை கூறியேன். ஒரு டியூன் போட்டார். அந்த முதல் டியூனே ஓகே ஆகிவிட்டது. அடுத்த பாடல் சூழ்நிலையை சொன்னேன். அதற்கு ஒரு டியூன் போட்டார். அதுவும் ஓகே ஆகிவிட்டது’ எனப் புகழ்ந்தார்.

Image result for anirudh with a r murugadoss

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பிஜிஎம் இசைக் கோர்வை வேலையில் ஈடுபட்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அனிருத் பின்னணி இசையை வடிவமைக்கிறார். மேலும் முருகதாஸ், “பயத்தினால் ஏற்படும் வேகத்திற்கு தயாராகுங்கள். முழு வீச்சுடன் பிஜிஎம் இசை வேலை நடந்து கொண்டிருக்கிறது. தீவிரமான காட்சிகள் மேலும் உச்ச உணர்ச்சியை அடைகின்றன” என்று தெரிவித்துள்ளார். 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்