[X] Close

54 வயது ஆணின் கண்களில் பசையை தடவி கொலை செய்த இளம்பெண்..! அதிர்ச்சி தகவல்..!

தமிழ்நாடு

Young-women-killed-elder-man-in-chennai

ஆபாச‌ படமெடுத்து மிரட்டிய நபரை, பாதிக்கப்பட்ட பெண்ணே கொலை செய்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.


Advertisement

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ்ரோடு பகுதியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் என்பது தெரியவந்தது.

image


Advertisement

54 வயதான சேகருக்கு, 23 வயது இளம்பெண் ஒருவருடன் 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததும், பெண்ணை ஆபாச படம் எடுத்து அவர் மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரிகிறது. இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்த நிலையில், வேறு யாருடனும் இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என சேகர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில் நேற்று சேகரும், இளம்பெண்ணும் அடையாறில் சந்தித்துள்ளனர். அப்போது பரிசு தருவதாக கூறி கண்ணை மூடச்சொல்லிய இளம்பெண், சேகரின் கண்ணில் ஃபெவிக்விக் பசையை பூசிவிட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்தப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close