Published : 02,Jun 2017 01:52 PM

சினிமாவை விட்டே விலகுவேன்: கமல் அறிவிப்பு

Kamal-Haasan-demands-GST-cut--says--28--tax-will-ruin-regional-cinema-

சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் திரைப்படத் தொழிலை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை தென்னிந்திய வர்த்தக சபையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சினிமாவும் சூதாட்டம் ஒன்றல்ல. சினிமா என்பது ஒரு கலை. தேசிய கீதத்தையே பெங்காலி மொழியில் பாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு தேச ஒற்றுமை குறித்து நன்றாகவே தெரியும். தேச ஒற்றுமையை வரவேற்கிறோம். இந்தி சினிமாவும், தமிழ் சினிமாவும் ஒன்றல்ல. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சினிமாவுக்கு அதிகபட்ச வரிவிதிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜிஎஸ்டி வரிவிதிப்பினை இந்தி திரையுலகம் ஏற்றுக்கொண்டாலும், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திரையுலகை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். சினிமாவுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால், சினிமாவை விட்டே விலகுவேன் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்குப்பிறகான நாட்டின் வரிசீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறை நாடு முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய வரிவிதிப்பின்படி பொருட்களுக்கு  5, 12, 18, 28 சதவீதம் என்று 4 வகையாக வரி விதிக்கப்படுகிறது. சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிகபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்