துருக்கியில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக வேறு ஒரு இடத்திற்கு வாகனம் மூலம் நகர்த்தப்பட்டது.
கட்டிடக்கலையின் வளர்ச்சி என்பது உலக அளவில் மற்ற துறையைவிட மிகவேகமாக வளர்ந்துவிட்டது. ஒரு கட்டிடத்தை நாம் எங்கு நினைக்கிறோமோ அங்கு அப்படியே தள்ளி வைக்ககூடிய அளவுக்கு தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.அப்படி ஒரு ஆச்சரியத்தை நேரடியாக பார்க்கும் போது பெரிய வியப்பு துருக்கியில் நடந்துள்ளது.
துருக்கியிலுள்ள திக்ரிஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்ட லிசு என்ற அணை முழுக்க தண்ணீர் நிரம்பியது. இதனால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 6 நூற்றாண்டு பழமை வாய்ந்த மசூதி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அப்பகுதியிலிருந்த எரி ரிஸ்க் மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு கலாச்சார பூங்காவில் வைக்கப்படவுள்ளது.
ஆயிரத்து 700 டன் எடையுள்ள பழமையான மசூதி Self Propelled Moduler Transporter என்ற தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டு சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்திற்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!