[X] Close

‘வீட்டில விஷேசங்க’ - இந்த ஆண்டில் மகிழ்ச்சியில் மூழ்கிய சினிமா பிரபலங்கள்..!

சினிமா

Kollywood-celebs-who-turned-parents-in-2019

இந்த ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். இன்னும் சில வாரங்களில் புதிய ஆண்டு உங்களை வரவேற்க காத்திருக்கிறது. ‘பழையன கழிதல்’ என்பார்கள். ஆக ‘புதியன புகுவதற்கு’ முன்னால் பழைய ஆண்டை கொஞ்சம் அசைப்போட்டு பார்ப்பது இன்பம். 

எமி ஜாக்சன்

திருமணத்திற்கு முன்பே எமிஜாக்சன் கர்ப்பிணியானது இந்திய சினிமா வட்டாரத்தில் பெரிதும் அடிப்பட்ட செய்தி. அவர் தனது காதலருடன் வனப்பகுதிகளுக்கு போவது அங்குள்ள வனவிலங்குகளுடன் நேரத்தை செலவிடுவது என மும்முரமாக இருந்த எமி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன் காதலருடன் திருமண நிச்சயதார்த்தத்தை செய்துகொண்டார். அதன் பிறகு இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இந்த ஜோடி ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டனர். இந்திய சினிமாவில் ‘2.0’ திரைப்படத்திற்குப் பின் எமி, தன் இல்லற வாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த ஆண்டு எமி, தாயாக மாறிய செய்தி பெரிய ஹைலைட்.


Advertisement

பாபி சிம்ஹா & ரேஷ்மி மேனன்

தேசிய விருது வென்ற பாபி சிம்ஹா மற்றும் நடிகை ரேஷ்மி மேனன் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு முத்ரா சிம்ஹா என பெயரிட்டனர். அதனை அடுத்து. இந்த ஆண்டு நவம்பர் 11 அன்று இவர்களுக்கு
அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில்தான் தனது மகள் ரேஷ்மி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.


Advertisement

 

சமீரா ரெட்டி மற்றும் அக்ஷய் வர்தே

சமீரா ரெட்டி, அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு முதல் குழந்தை 2015 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு யான ஹான்ஸ் எனப் பெயரிட்டனர். மேலும் இந்த ஆண்டு, சமீராவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நைரா என்று பெயரிட்டனர். இந்தக் கர்ப்பக்காலத்தில் இவர், நீருக்கு அடியில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிக பிரபலமானது. முதல்முறை தான் கர்ப்பமானபோது அதிகம் பயந்ததாக தெரிவித்த சமீரா ரெட்டி, தனது இரண்டாவது பிரசவத்தை மிக எளிதாக கையாண்டதாக தெரிவித்திருந்தார்.

கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா கிருஷ்ணன்

நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா கிருஷ்ணன் ஜோடிக்கு 2015 இல் திருமணம் நடந்தது. கடந்த ஜூன் மாதம் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க உள்ளதாக கணேஷ் அறிவித்தார். ஆகவே சமூக ஊடகங்களில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. சமீபத்தில்தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அந்தக் குழந்தைக்கு சமரியா என பெயர் வைத்துள்ளதாகவும் இவர்கள் அறிவித்தனர்.

சிவாவும் பிரியாவும்

நடிகர் சிவாவுக்கும் பிரியாவுக்கும் கடந்த 2012 ஆண்டு திருமணம் நடந்தது. அந்தக் கல்யாணத்தில் அஜித் கலந்து கொண்டது வைரல் செய்தியானது. காதல் ஜோடியாக இருந்து பின் தம்பதியாக மாறிய இவர்கள் இந்த ஆண்டுதான் பெற்றோராக மாறினர். கடந்த ஜூலை மாதம் பிரியாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயரிட்டனர்.

சாண்டா எமி மற்றும் பிரஜின் பத்மநாபன்

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி அன்று இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. இரண்டும் பெண் குழந்தைகள் என்பது ஹைலைட். திருமணமாகி 10 வருடங்களான இந்த ஜோடிக்கு, இந்த வருடம் பெரிய ஸ்பெஷல். கர்ப்பமானது முதல் பெற்றோராக மாறியது வரை சகல அறிவிப்பை இந்த ஜோடி சமூக வலைத்தளத்தில் அறிவித்தபடி இருந்தன.

 

சுஜா வருணி மற்றும் சிவக்குமார்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ மூலம் அதிகம் அறியப்பட்டவர் சுஜா வருணி. இவர் தனது நீண்டகால காதலரான நடிகர் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22 தேதி அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு இந்த ஜோடி அத்வைத் எனப் பெயரிட்டுள்ளனர்.‘பிக்பாஸ்’ வெளிச்சத்தை அடுத்து திருமணம், அதன்பிறகு பெற்றோர் ஆனது என இந்த வருடம் சுஜாவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. 

சென்ட்ராயன்- கயல்விழி

‘மூடர்கூடம்’ தான் சென்ட்ராயனுக்கு தமிழ்சினிமாவில் முகம் கொடுத்தது. அதன் பிறகு பல ஏறுமுகம். இவரது அடுத்தகட்ட பாய்ச்சல் 2018 ஆம் ஆண்டு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றது. அங்குதான் காதல் மனைவி கயல்விழி மற்றும் கடினமான வாழ்க்கையை கடந்து வந்து பற்றி சென்ட்ராயன் பேசினார். ஒரு ஆதரவற்ற குழந்தையை தான் ஏற்றுக் கொள்ள இருப்பதாக அவர் சொன்ன வார்த்தைகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்போது கமல்ஹாசன் உங்களுக்கு பெரிய மனது என செண்ட்ராயனை வாழ்த்தினார். அதனுடன் உங்கள் மனைவி ஒரு வருடத்திற்குள் ஒரு குழந்தையை பெற்றெடுப்பார் எனக் கூறினார். அதேபோல தன் மனைவியின் கர்ப்பத்தை பற்றி தகவலை தெரிவித்தார் செண்ட்ராயன். இந்தத் தம்பதிக்கு இந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.டா மற்றும் முரளிகிருஷ்ணா 

‘நெடுஞ்சாலை’ நடிகை ஷிவாடா, நடிகர் முரளி கிருஷ்ணாவை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி கல்லூரி முதல் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள். அதன் பிறகு அது காதலாக மலர்ந்து. இவர்களின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இந்த ஜூலை மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர் இந்த நல்ல செய்தியை ஓணம் பண்டிகை அன்று அறிவித்தார். இவர்களின் குழந்தைக்கு அருந்ததி என்று பெயரிடப்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close