பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து கட்ட உ.பி அரசு திட்டம்

பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து கட்ட உ.பி அரசு திட்டம்
பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து கட்ட உ.பி அரசு திட்டம்

பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து கட்ட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது

தேசிய கங்கை நதி ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, கட்டட வளாகத்தின் படிக்கெட்டில் ஏறிச்சென்றுக் கொண்டிருந்த போது தடுக்கி விழுந்தார். 

படிகளில் ஒன்று மட்டும் சற்று உயரமாக இருந்ததால் பிரதமர் மோடி தடுக்கி விழுந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படிக்கட்டு விரைவில் இடித்து மீண்டும் சரியான உயரத்தில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள கோட்ட ஆணையர் சுதிர் எம்.போப்ட், ஒரே ஒரு படி மட்டுமே சரியான உயரத்தில் இல்லாமல் இருந்துள்ளது. விரைவில் இடிக்கப்பட்டு மற்ற படிகளின் உயரத்துக்கு இணையாக கட்டப்படும். இன்னும் பலரும் அந்த படியில் தடுக்கி விழுந்துள்ளனர். எனவே கூடிய விரைவில் படி சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com