பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சென்னை புதியதல்ல. பிரபுதேவா இயக்கியுள்ள ‘தபாங்3’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்திருந்தார். இந்தப் படத்தில் சோனாக்ஷி சின்ஹா மற்றும் சுதீப் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான், தனக்கும் சென்னைக்குமான தொடர்புகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நான் ஒரு நடிகராக ஆவதற்கு முன்பே சென்னையுடன் ஒரு ஆழமான தொடர்பை கொண்டிருந்தேன். நான் சென்னைக்கு முதன்முதலில் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காகவே வந்தேன். அந்த விளம்பரம் மீனவர் பகுதியில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு ரேவதி உடன் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு வந்தேன் அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி என் சினிமா வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அந்தப் படம் இங்கு படமாக்கப்பட்டது. சென்னையில் நான் நிறைய பார்ட்டி வைத்திருக்கிறேன். இந்த ஊரில் சிறந்த உணவுகளை ருசித்து பார்த்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவை தீவிரமாக பார்ப்பேன். விஜயின் ‘போக்கிரி’, விக்ரமின் ‘சேது’ ஆகிய இரண்டு படங்களும் இங்கிருந்து பாலிவிட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சல்மான் கான் தான் ஒரு ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர் என்பதை குறிப்பிட்டார். “ஷங்கரின் ‘2.0’ இன் ஆடியோ வெளியீடு மும்பையில் நடந்தபோது, நான் அந்த நிகழ்விற்குள் நுழைந்தேன், ரஜினி அங்கேயே என்னைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ஆம், நான் அங்கு அழைக்கப்படாத விருந்தாளியாக போனேன். அவரைப் பார்க்க விரும்பினேன், ஆகவே போனேன். அவருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது நிறைய நேரங்களை செலவிட்டுள்ளேன். அதற்கு முன்னதாக, அவர் என் தந்தையுடன் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?