கேப்டனாக முதல் போட்டியிலேயே சதமடித்த விராத் கோலி

கேப்டனாக முதல் போட்டியிலேயே சதமடித்த விராத் கோலி
கேப்டனாக முதல் போட்டியிலேயே சதமடித்த விராத் கோலி

இந்திய அணியின் முழுநேர கேப்டாக தான் விளையாடும் முதல் போட்டியிலேயே விராத் கோலி சதமடித்து அசத்தினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 63 ரன்களை எடுப்பதற்குள் தோனி, யுவராஜ் உள்பட 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்தநிலையில், கேப்டன் விராத் கோலியுடன் கைகோர்த்த கேதர் ஜாதவ், இந்திய அணியை வெற்றியை நோக்கி நடைபோடச் செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி, கேப்டனான முதல் போட்டியிலேயே சதம் விளாசினார். அவர் 93 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உதவியுடன் 105 ரன்களை எட்டினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராத் கோலியின் 27ஆவது சதம் இதுவாகும். இந்திய அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. கேதர் ஜாதவ் 93 ரன்களுடனும், கோலி 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு 16 ஓவர்களில் 106 ரன்கள் தேவை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com