[X] Close

என்னா லவ்வு: அண்ணனை தள்ளிவிட்டு தாலி கட்டிய தம்பி!

Confusion-in-Marriage-at-Vellore

மணகோலத்தில் இருந்த மணமகனை தள்ளிவிட்டு அவர் தம்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செல்லரைப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. முகூர்த்த நேரத்தில், பூஜை செய்த தாலியை பெரியோர்களிடம் ஆசி வாங்கி வரச்செய்தனர். கெட்டி மேளம் கொட்ட தாலியை மணமகனிடம் கொடுத்தார் ஐயர். அப்போது அருகில் நின்றிருந்த தம்பி வினோத், அண்ணன் ராஜேஷை திடீரென தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த வேறு ஒரு தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டினார்.


Advertisement

அருகில் இருந்த பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் வினோத்தை உறவினர்கள் அடித்து உதைத்தனர். அவரை விசாரித்தபோதுதான் இருவரும் காதலித்தது தெரியவந்தது. ராஜேசுக்கு பெண் பார்க்க சென்றபோது மணமகள், வினோத்தை பார்த்து சிரித்தாராம். அப்போதே அவர்களுக்குள் காதல் துளிர்த்ததாம். இதையடுத்து இருவரும் ஃபோனில் காதலை வளர்த்துள்ளனர். அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கரம் பிடித்த இந்த சம்பவம் திருமண விழாவிற்கு வந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close