Published : 15,Jan 2017 02:32 PM

இந்திய தொடருக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் தயாரான ஆஸ்திரேலிய அணி

Australia-announce-Test-squad-for-tour-of-India

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் நீண்டகாலமாக இடம்கிடைக்காமல் தவித்து வந்த கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நாதன் லியான், ஸ்டீவ் ஓ கஃபே, ஆஸ்டன் அகர் உள்ளிட்ட 5 சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி முழுவிபரம்:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், மிச்செல் மார்ஷ், ஆஸ்டன் அகர், ஸ்டீவ் ஓ கஃபே, மிட்செல் ஸ்டார்க், ம்ட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் ஹசல்வுட், ஜாக்‌ஷன் பேர்ட், நாதன் லியோன்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்