[X] Close

விமானங்கள் மீது பறவைகள் மோதும் விபத்துகள் அதிகரிப்பு

report-on-flights-with-bird-crash

இந்தியாவில் விமானங்கள் மீது பறவைகள் மோதும் விபத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு ‌அதி‌கரித்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த நவம்பர் வரை 29 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஒருமுறை மட்டுமே விமானத்தின் மீது பறவை மோதியதாகவும், அதுவே 2017ஆம் ஆண்டு 7 சம்பவங்களாக அதிகரித்தது என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 24 முறை, விமானங்களில் பறவைகள் மோதிய விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

விமான நிலைய பகுதிகளின் புற்களில் உள்ள பூச்சிகளை உண்ண பறவைகள் வருவதே விபத்துக்களுக்கு காரணம் என கூ‌றப்படுகிறது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விமான‌ நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close