Published : 16,Dec 2019 02:24 AM

அரசு பேருந்து - பைக் மோதி விபத்து : 3 வயது மகளுடன் தாய் உயிரிழப்பு

TAMBARAM-MTC-BUS-ACCIDENT-MOM-AND-DAUGHTER-DEATH

சென்னை மடிப்பாக்கத்தில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் தாய் மற்றும் மூன்று ‌வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

திரிசூலத்தைச் சேர்ந்த சுதா கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். மடிப்பாக்கம் அருகே சென்றபோது, தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில், சுதா‌ மற்றும் அவரது 3 வயது மகள் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவரது 2 வயது மகன் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்