[X] Close

“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!

Sexual-Harassment-complaint-on-Nithyananda

ஆசிரம உண்மைகளை அம்பலப்படுத்தியதால் நித்யானந்தாவின் சீடர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக, முன்னாள் சீடரே புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல், காவல்துறை ஒருபுறம் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருக்கும் சூழலில், மறுபுறம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பாலியல் புகார், குழந்தை கடத்தல், மோசடி வரிசையில், மேலும் ஒரு புகார் நித்யானந்தா மீதும், அவரின் சீடர்கள் மீதும் கொடுக்கப்பட்டிருக்கிறது.


Advertisement

இம்முறை, புகார் சொல்லியிருப்பவர், வெளி ஆள் கிடையாது. நித்யானந்தாவின் ஆசிரமத்தில் முக்கிய பொறுப்புகளை நிர்வகித்ததாக கூறிக் கொள்ளும் விஜயகுமார் என்பவர்தான், புதிய புயலை கிளப்பியிருப்பவர். 2009-ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் சேர்ந்த இவர், நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரிய சீடராக வலம் வந்திருக்கிறார்.

தஞ்சை, திருவாரூர், வேதாரண்யம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வாங்கப்பட்ட ஆசிரம மடங்களில் முக்கிய பொறுப்புகளையும் வகித்ததாக கூறுகிறார், விஜயகுமார். இப்படியிருக்க, நித்யானந்தா தனது பாலியல் ஆசைக்கு இணங்க தம்மை கட்டாயப்படுத்தியதாக பகீர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். தற்போது ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமங்களை அம்பலப்படுத்தியதால், நித்யானந்தாவிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறியுள்ள விஜயகுமார், பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement

நித்யானந்தாவின் முகத்திரையை கிழிக்கப் போதுமான பல ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதை மூடி மறைப்பதற்காக நித்யானந்தாவின் சீடர்கள் தம்மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் விளக்கமளித்திருக்கிறார், விஜயகுமார். நித்யானந்தாவிடம் இருந்து பிரிந்துவந்த ஒவ்வொருவரும், அவர் மீதும், அவரின் ஆசிரமங்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்து மர்மமாகவே உள்ளன.
ஆனால், அதை துளி கூட கண்டுகொள்ளாத நித்யானந்தா, வழக்கம்போல் கூலாக ஆன்லைன் சொற்பொழிவாற்றி வருகிறார். இவற்றுக்கெல்லாம் காவல்துறை நடத்தும் விசாரணையிலேயே பதில் கிடைக்கும்.


Advertisement

Advertisement
[X] Close