பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவி ட்விங்கிள் கண்ணாவுக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட இரண்டு காதணிகளை வழங்கி உள்ள நிகழ்வு பலரையும் கவனிக்கும்படி செய்துள்ளது.
நடிகரும் எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா தனது கணவர் நடிகர் அக்ஷய் குமாரிடமிருந்து ஒரு அரிய பரிசைப் பெற்றுள்ளார். அந்தப் பரிசு மிகவும் விநோதமானது மட்டுமல்ல; இந்தக் காலகட்டத்தில் சர்ச்சைக்கு உரியதாகவும் மாறி உள்ளது. அப்படி என்னதான் பரிசு கொடுத்தார் என்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். வெங்காயத்தால் செய்யப்பட்ட ஒரு ஜோடி காதணிகளை அவரது கணவர் பரிசாக வழங்கியுள்ளார். அவர் வழங்கியுள்ள காதணிகளின் புகைப்படத்தைப் ட்விங்கிள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படம் இப்போது பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விங்கிள் கண்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் கணவர், கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு திரும்பிய வந்தபோது அவர்,‘காதணிகளை அவர்கள் கரீனாவிடம் காண்பித்தார்கள் அதை பார்த்ததும் அவர் மிகவும் விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் இவற்றை ரசிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆகவேதான் இவற்றை நான் உங்களுக்காக வாங்கினேன்’ என்று சொன்னார். இதை எழுதிவிட்டு ட்விங்கிள் கண்ணா மேற்கொண்டு சில வரிகளை எழுதி உள்ளார். அதில், ‘சில நேரங்களில் இது மிகச்சிறிய விஷயங்கள்தான். ஆனால் உங்கள் இதயத்தைத் தொடக்கூடிய வேடிக்கையான விஷயங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ள அவர் இதற்கு #onionearrings #bestpresentaward என்ற ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி உள்ளார்.
முன்பாக அக்ஷய் குமாரும் கரீனா கபூரும் விரைவில் வெளிவர உள்ள ‘Good Newwz’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கபில் ஷர்மா நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போதுதான் கரீனாவுக்கு ஒரு ஜோடி வெங்காய காதணிகளை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Twinkle Khanna (@twinklerkhanna) on
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!