[X] Close

கோயம்பேடு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை

Onion-Price-hike-once-again-in-Koyambedu-market

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை நேற்றையை விட சற்று அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தற்போது மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் எகிப்து வெங்காயம் இறக்குமதியாலும் கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்து சற்று அதிகமாகி இருப்பதாலும் அதன் விலை சற்று குறைந்து வந்தது. 


Advertisement

இந்நிலையில் நேற்றுடன் ஒப்பிடும் போது வெங்காயம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய் உயர்ந்து 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி தினசரி அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close