[X] Close

சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் முதல் பிரிட்டன் பிரதமராகும் போரிஸ் வரை #TopNews

Today-s-Top-news

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. திமுகவினரும் பல இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


Advertisement

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு சீட்டுக் குலுக்கி ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் தலைவர் பதவி வரை குலுக்கலில் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பதற்றம் நிலவுவதால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மேக் இன் இந்தியா திட்டத்தை பாலியல் வன்கொடுமை சம்பவங்களுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே பேத்தி கடத்தப்படுவதை தடுத்த மூதாட்டி கொலை‌ செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீசி கொடூர செயலில் ஈடுபட்ட நபர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் போரிஸ் ஜான்சன். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close