[X] Close

அட குடிகாரா... மகளின் உயிரைப் பறித்த போதை டான்ஸ்!

child-death-due-to-her-drinking-father

குடிகார அப்பாவால் நான்கு வயது சிறுமி தனது உயிரை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகே உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் சாட்வி (30). இவர் தனது மனைவி கவுரி, நான்கு வயது மகளுடன் திருமண வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு நடந்த பார்ட்டியில் விடிய விடிய குடித்தாராம். நேற்று அதிகாலை வீட்டுக்கு கிளம்பினார்கள் மூவரும். நான்கு வயது மகளை தோளில் உட்கார வைத்தபடி நடந்துகொண்டிருந்த நிலேஷுக்கு போதை குறையவில்லை. தள்ளாடியபடியே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பாட்டுப்பாடிக்கொண்டே ஆடியபடி வந்தாராம் நிலேஷ். மகள் அப்பாவின் நடனத்தால் சிரித்துக் கொண்டிருந்தாள். மாண்ட்வி அருகே சைவான் கிராமத்தில் இருந்த சிறிய பாலம் ஒன்றைக் கடக்கும் போது தள்ளாடிய நிலேஷ், பேலன்ஸ் தவற, பாலத்தில் மேலிருந்து மகள் கீழே விழுந்தார். அவரை அடுத்து நிலேஷும் அவர் மீது விழுந்தார். இருபது அடி ஆழம் அது. விழுந்ததில் மகள், சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பலியானார். நிலேஷுக்கு காயமேற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளின் உயிரை பறித்த போதை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close