Published : 01,Jun 2017 05:26 AM
போலீஸ் அட்வைஸ்: வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்!

தீ விபத்து ஏற்பட்டுள்ள தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி, வீடுகளில் வசிப்போர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் ஏற்பட்ட தீ இன்றும் இரண்டாவது நாளாக எரிகிறது. கட்டடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்துள்ளதால் புகை மண்டலமாக அப்பகுதி காட்சி அளிக்கிறது. சுமார் 450-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்தின் உள்பகுதியில் எரியும் தீயை அணைக்க வீரர்கள் இன்று காலையும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று நேரில் அறிவுறுத்தியதின் பேரில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு அவர்கள் செல்கின்றனர்.