[X] Close

சாம்பியன்ஸ் கோப்பை: மழையும் ஆடுமாம்ல!

ICC-Champions-Trophy-2017--Rain-may-play

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. வரும் 18 ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் பங்கேற்கின்றன. முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் முதல் முறையாக அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பையில் கலந்து கொள்ளவில்லை.


Advertisement

அணிகள், இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

இங்கிலாந்தில் தற்போது அடிக்கடி மழை பெய்துவருவதால், போட்டியின் நடுவே மழையின் ஆட்டமும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரே மாதிரியான வானிலை நிலவினால் 400 ரன்கள் வரை குவிக்கலாம் என்கிறார்கள். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close