Published : 13,Dec 2019 05:21 AM

“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு

NASA-Identifies-Regions-of-Mars-With-Water-Ice-Just-Below-The-Surface

செவ்வாய் கிரகத்தில் தரையில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

பூமியை போன்று பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெறுகின்றன. இதற்காக உலக நாடுகள் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றன. குறிப்பாக நாசா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பிற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பூமியும் செவ்வாயும் சில பண்புகளில் ஒத்துள்ளதால் செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ முடியும் ‌என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். மனிதர்களின் முக்கிய தேவையான நீர் இருக்கிறதா என்பதையே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.


பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!


மேலும் செவ்வாய் கிரகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு அங்குலத்துக்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. இது தொடர்பான வரைபடங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.

இந்த நீர்ப்பனிக்கட்டிகளை எடுக்க பெரிய உபகரணங்கள் தேவையில்லை என்றும், மண்வெட்டி கொண்டே வெட்டி எடுத்துவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஆராய்ச்சி நடப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்