[X] Close

‘செத்தே போயிருப்பேன்’: விமான விபத்திலிருந்து உயிர்தப்பிய சன்னி லியோன்

Sunny-Leone-Has-Narrow-Escape--Plane-Nearly-Crashes

பாலிவுட் நடிகர் சன்னி லியோன், புனே பகுதியில் தனியார் விமானத்தில் பயணம் செய்தபோது மோசமான வானிலை காரணமாக ஏற்பட இருந்த விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.


Advertisement

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் நண்பர்களுடன் புனே அருகே தனியார் விமானத்தில் பயணம் செய்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகும் சூழல் உருவாகி, பைலட்டின் சாமர்த்தியத்தால் சன்னி லியோன், அவர் கணவர் மற்றும் நண்பர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியோடு வீடியோ வெளியிட்டுள்ளார், சன்னி லியோன். அதில், “நாங்கள் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மோசமான வானிலை காரணமாக எங்களுடைய தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும். எப்படியோ தப்பித்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய வாழ்க்கை அவர்கள் கையில்தான் இருந்தது. எப்படியோ எங்களைக் காப்பாற்றிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close